விசிக கூட்டத்தில் அதிரடி தீர்மானம்...! - தொல். திருமாவளவனை துணை முதலமைச்சராக்க பகிரங்க கோரிக்கை...!
Actionable resolution VKC meeting Public demand make Thirumavalavan Deputy Chief Minister
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் நிலையில், அந்த அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு வழங்கி வருகின்றன. அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளதால், அக்கட்சியின் அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின.
ஆனால், அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று திருமாவளவன் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓமலூர் மாவட்ட செயலாளர் சாமுராய்குரு தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றும், சமூகத்தின் எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரப் பங்கீடு கிடைக்கும் வகையில் அவரை தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் காஜாமைதீன், மண்டல துணை செயலாளர்கள் அங்கப்பன், தெய்வானை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
English Summary
Actionable resolution VKC meeting Public demand make Thirumavalavan Deputy Chief Minister