விவசாயிகளின் கண்ணீர் விளைநிலத்தில் வீண்!...வீடுகளை அழித்து பரந்தூர் விமான நிலையம்? - Seithipunal
Seithipunal


பரந்தூர் விமான நிலையம் அமைக்க, முதற்கட்டமாக நாகப்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை அளவெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், புதியவிமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு வகையிலான போராட்டங்களை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முதற்கட்டமாக நாகப்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை அளவெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்கு தொடர் எதிர்ப்பு உள்ள நிலையில் வீடுகளை அளவெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers tears are in vain in the farmland destroying houses and paranthur airport


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->