ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு : உங்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.!
farmers of Ranipet district grievance redressal meeting
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29-ம் தேதி காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறையினர், தோட்டக்கலை துறையினர், வேளாண் பொறியியல் துறையினர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையினர், பட்டு வளர்ச்சி துறையினர், மீன்வளத் துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் பங்கேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
English Summary
farmers of Ranipet district grievance redressal meeting