முகூர்த்த நாட்கள் எதிரொலி - பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம்.! - Seithipunal
Seithipunal


முகூர்த்த நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் பத்திரப்பதிவு அதிகளவில் நடைபெறுவதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் அதிகளவில் பத்திர பதிவு நடைபெறுவதால் கூடுதல் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான நாளையும், நாளை மறுநாளும் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

ஆகவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான இந்த இரண்டு நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

extra tokens distributes register office for subhamukoortha dates


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->