விடுதியில் மாணவி தூக்கிட்டு போட்டு தற்கொலை..நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு போட்டு தற்கொலை  செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது, ஏனென்று சொன்னால் மன அழுத்தத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கால்.  சில மாணவர்கள் தேர்வு பயத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர், அது மட்டும் இல்லாமல் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள் உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்து தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.இதே போல் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்த இளம்பெண்பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்த இளம்பெண் பூமிகா  அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். பூமிகா பல்கலைக்கழக விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.நிலையில், விடுதியில் திங்கட்கிழமை இரவு மற்றொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பூமிகா அதன்பின்னர், விடுதியில் தனது அறைக்கு சென்ற அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பூமிகா தனது அறைக்கு சென்று வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த மாணவிகள் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். 

விரைந்து வந்த விடுதி காப்பாளர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மாணவி பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student commits suicide by hanging in the hostel What happened?


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->