மெட்டா புதிய திட்டம்: விளம்பரமில்லா வாட்ஸ்அப் சேவை, ஐரோப்பாவில் €4 விலையில்...!
Meta new plan Ad free WhatsApp service priced at 4 Europe
உலகளாவிய அளவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ்அப்பை உலகில் 3 பில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
மேலும், ஆரம்பத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியுடன் அறிமுகமான வாட்ஸ்அப், பின்னர் புகைப்படங்கள், கோப்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதியை கொண்டுவந்தது.

மேலும், குழு அரட்டை மற்றும் ஸ்டேட்டஸ் போன்ற புதுப்புது வசதிகள் வாட்ஸ்அப்பின் தனித்துவத்தை வலுப்படுத்தின. இதனால், எந்த நிறுவனமும் போட்டி வந்தாலும், டெக் உலகில் வாட்ஸ்அப் தனித்த இடத்தை பெற்றுள்ளது.
மெட்டா நிறுவனம் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை இடையூறாக கொண்டு வந்துள்ளது. இதனால் சில பயனர்களுக்கு அனுபவத்தில் இடையூறு ஏற்படுகிறது.
இதனைச் சரிசெய்ய, மெட்டா தற்போது விளம்பாரம் இல்லா சேவை வழங்க புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில், ஐரோப்பிய நாடுகளில் சுமார் €4 (ரூ.433) விலையில் இது அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Meta new plan Ad free WhatsApp service priced at 4 Europe