கள்ளக்காதல் ஜோடி  கொலை:  3 பேர் கைது..வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


கள்ளக்காதல் ஜோடியை  ஈவு, இரக்கமின்றி கிணற்றில் வீசி கொன்ற பெண்ணின் தந்தைஉள்பட குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் உம்ரி அருகே உள்ள போர்ஜூனி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவானி என்பவருக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதி கோலேகாவ் கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சஞ்சீவானிக்கு லகான்பண்டாரே என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் கள்ளக்காதலன் அந்தப்பெண்ணை அவரது வீடு தேடிச்சென்று சந்தித்ததை கண்ட  பெண்ணின் மாமியாருக்கு தெரியவந்தது.

சம்பவத்தன்று தனது மருமகளையும், அவரது கள்ளக்காதலனையும் கையும், களவுமாக பிடித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை, தாத்தா மற்றும் உறவினர் ஒருவர் அங்கு விரைந்து வந்தது கள்ளக்காதல் ஜோடியான சஞ்சீவானி, லகான் பண்டாரேயை அங்கிருந்து அழைத்து சென்றனர். போகும் வழியில் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து  கக்ராலா பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கள்ளக்காதல் ஜோடியின் கை, கால்களை கட்டி அவர்களை ஈவு, இரக்கமின்றி கிணற்றில் வீசி கொன்றனர். 

பின்னர், கிணற்றில் இருந்து சஞ்சீவானி, லகான் பண்டாரேயின் உடல்களை போலீசார் மீட்டனர். இதற்கு மத்தியில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உள்பட குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illicit love duo murder3 arrested sensational information revealed


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->