கனமழை எச்சரிக்கை.. பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!
Heavy rain warning Death toll rises to 30
ஜம்மு காஷ்மீருக்கு தொடரும் என கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,இதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்த்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. யூனியன் பிரதேசத்தின் ஒருசில பகுதிகளில் மேகவெடிப்பும் ஏற்பட்டதன் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தோடா மற்றும் கிருஷ்ட்வர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில், தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்பட்டது., வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Heavy rain warning Death toll rises to 30