உள்துறை அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் முன்னாள் திமுக நிர்வாகி.!
ex dmk excuetive ks radhakrishnan joined bjp
ஆளும் கட்சியான திமுகவின் செய்தித்தொடர்பாளாரக செயல்பட்டவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி கடந்த 2022 அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால், அரசியலில் இருந்து சற்று விலகியிருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று பாஜகவில் இணைந்தார்.
நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
English Summary
ex dmk excuetive ks radhakrishnan joined bjp