நீங்க ஆளுங்கட்சியா! எதிர்க்கட்சியா! கேள்வி எழுப்பிய திமுக கவுன்சிலரை மிரட்டிய ஈரோடு மாநகராட்சி மேயர்! - Seithipunal
Seithipunal


நீங்க திமுக கவுன்சிலரா? எதிர்க்கட்சி கவுன்சிலரா? 

ஈரோடு மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் நாகரத்தினம் திருக்குறளை வாசித்து முடித்ததும் கவுன்சிலர்கள் கூட்டுப் பொருள் தீர்மானம் மற்றும் கோரிக்கை குறித்தான விவாதங்கள் தொடங்கினர். அப்போது எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் தனது வார்டில் மாநகராட்சி மூலம் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை, கவுன்சிலராக பதவி ஏற்ற ஆறு மாதங்கள் முடிந்தும் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார். 

இந்த கேள்விக்கு பதில் அளித்த மேயர் நாகரத்தினம் ஈரோடு மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருப்பதால் நீதி வந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த பதிலை ஏற்றுக் கொள்ளாத கவுன்சிலர் மாதந்தோறும் 50 தீர்மானங்கள் வரை நிறைவேற்றுகிறார்கள் இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி உதவி வருகிறது என மக்கள் கேள்வி கேட்பதாக தெரிவித்தார். மேலும் எனது வார்டு சம்பந்தமாக பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்தவித பதிலும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு அவருடன் இருந்த திமுக கவுன்சிலர்கள் நடப்பது நம்முடைய ஆட்சி இதுபோன்று பேச வேண்டாம் என அவரை தடுத்தனர். மேலும் எந்த ஒரு சம்பவம் ஆனாலும் மேயரின் கணவர் தான் என்னிடம் பேசுகிறார் நான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற ரீதியில் தொடர்ந்து பேசியதால் மேயர் ஆத்திரம் அடைந்தார். இருப்பினும் கவுன்சிலரை சமாதல் செய்ய முயற்சித்தும் அவர் சமாதானம் ஆகாததால் உடனடியாக தனது நாற்காலியில் இருந்து எழுந்து கவுன்சிலரின் முன் வந்து நின்றார்.

திமுக கவுன்சிலர் ஸ்ரீதரை நோக்கி நீங்கள் திமுக கவுன்சிலராக இல்லை எதிர்கட்சி உறுப்பினராக நடப்பது நம்ம நமது ஆட்சி என்று தெரிந்தும் பிரச்சனை எழுப்பி விளம்பரம் தேட முயற்சியில் தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என எச்சரிக்கும் வகையில் பேசினார். இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும் தேவையில்லாமல் பேசுகிறீர்கள். இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். எதிர்க்கட்சி கவுன்சிலர்களே இதுபோன்று பேசுவதோ பிரச்சனை செய்வதோ இல்லை உங்களுக்கு என்ன பிரச்சனை என மிரட்டும் துணியில் பேசினார்.

இதனை அடுத்து மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து வந்த சபையின் மரபு படி நீங்கள் நாற்காலியில் இருந்து இறங்கி வரக் கூடாது என கூறி அழைத்துச் சென்றனர். எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என இருவரையும் சாதாரண சமாதானம் செய்து அமர வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மேயராக நாகரத்தினம் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து பேசுவதற்கே கூச்சப்படுவார். எந்த ஊரு பதிலாக இருந்தாலும் ஆணையர் மூலமாகவே பதிலளிப்பார். பூனை போன்று சுபாவம் கொண்ட மேயரை திமுக கவுன்சிலர் கேள்விகள் எழுப்பி புலியாக மாற்றியுள்ளார். மேயரின் இத்தகைய செயலை கண்டு அனைத்து கவுன்சிலர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode mayor warned DMK counselor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->