த்தூ.. இப்படியும் ஒரு துப்புக்கெட்ட குடும்பம்.. தகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அனுபவித்த துயரம்.. கதறிய பிள்ளைகள்.! - Seithipunal
Seithipunal


கேடுகெட்ட தகப்பனுக்கு பிறந்த பாவத்திற்கு பிள்ளைகள் அனுபவித்த கொடூரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மூத்த மனைவியும், இந்துமதி என்ற மற்றொரு மனைவியும் உள்ளனர். மூத்த மனைவி ரஞ்சிதாவிற்கு 2 மகன்கள் உள்ளனர். 

இந்துமதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராமலிங்கம் தனது இரண்டு மனைவிகளுடன், ஈரோடு ரங்கம்பாளையம் இரயில் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி இந்துமதியை தேடி அவரது தோழி சசிகலா தனலட்சுமி அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். 

இந்நிலையில், ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவுடன் சசிக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ராமலிங்கம், தனது முதல் மனைவியை ரஞ்சிதாவை சக்தி என்றும், இந்துமதியின் தோழி சசிகலா தனலட்சுமியை சிவன் போல இருப்பதாகவும் புகழ்ந்து, ஒரு கட்டத்தில் தனது இரண்டு குழந்தைகள் முன்பு ரஞ்சிதாவுக்கும் - தோழி சசிகலாவுக்கும் இடையே திருமணம் செய்து வைத்து இருக்கிறார். 

இதுமட்டுமல்லாது ரஞ்சிதாவை திருமணம் செய்த தோழி சசிகலாவை குழந்தைகள் அப்பா என்றும், உண்மையான அப்பாவான ராமலிங்கத்தை மாமா என்று அழைக்குமாறு சிறுவர்களை கொடுமை படுத்தியுள்ளனர். இந்த கொடுமையின் உச்சமாக சிறுவர்களுக்கு மிளகாய் பொடி சாப்பாடு கொடுத்து துன்புறுத்திய நிலையில், சிறுவர்கள் காரத்தால் கதறியபோதும் குடிக்க தண்ணீர் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். 

உடல் முழுவதும் அடித்து துன்புறுத்தி, மிளகாயை உடலில் தேய்த்து சட்டையில்லாமல் மொட்டை மாடியிலும் படுக்க வைத்துள்ளனர். இரண்டு சிறுவர்கள் வீட்டில் அனைத்து வேலையையும் செய்து கொடுமையை அனுபவித்து வந்த நிலையில், வீட்டின் கழிவறைகளை சுத்தப்படுத்தி கிருமிநாசினியை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு சிறுவர்களும் தூங்கிஇருப்பார்கள் என்று நினைத்து, ராமலிங்கம் மற்றும் ரஞ்சிதா, சசிகலா ஆகியோர் சிறுவர்களை நரபலி கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் வீட்டில் இருந்து தப்பி தனது தாத்தா பாலசுப்பிரமணியத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளின் அறிவுரையின்படி, சிறுவர்கள் இருவரும் தாத்தா பாட்டியுடன் வசித்து வரும் நிலையில், குழந்தைகள் மூலமாக வெளியே விஷயம் தெரிவதை தடுக்க முயன்ற ரஞ்சிதா மற்றும் சசிகலா குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று, அவரது தந்தை இறந்துவிட்டார் என்று கூறி பள்ளி சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ளனர். 

மேலும், குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்க கூறி பாலசுப்பிரமணியத்துக்கு ரஞ்சிதா தொடர்ந்து போன் செய்த மிரட்டல் செய்து வந்துள்ளார். இரண்டு சிறுவர்களும் தங்களது உயிருக்கும், தாத்தா பாட்டியின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். 

சிறுவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் ராமலிங்கம், சசிகலா, ரஞ்சிதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Fraud Mother and Father Torture Children 13 APril 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->