வாக்காளர்களை கொடுமைப்படுத்தும் திமுக.. ஈரோடு கிழக்கில் போட்டு தாக்கிய ஈபிஎஸ் ..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்பொழுது பேசிய அவர் "திமுகவினர் வாக்காளர்களை பயமுறுத்தி வருகின்றனர். விவரம் தெரியாத வாக்காளர்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்துவிட்டு திமுகவிற்கு வாக்கு செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு தெரிந்து விடும் என்று ஒரு பொய்யான செய்தியை வாக்காளர் இடையே பரப்பி வருகின்றனர். 

வாக்காளர் பெருமக்கள் யாருக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே வாக்காளர் பெருமக்கள் திமுக சொல்லும் பொய்களை நம்ப வேண்டாம். 

எனவே வாக்காளர் பெருமக்கள் சுயமாக சிந்தித்து நாட்டின் நலனுக்காக சிந்தித்து எளிமையான வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். திமுகவினர் வாக்காளர்களை நம்பவில்லை. அவ்வாறு நம்பி இருந்தால் அவர்களை அடைத்து வைத்திருக்க மாட்டார்கள். 

ஆனால் வாக்காளர்களை நம்பாமல் அவர்களைக் கொண்டு போய் ஒளித்து வைத்துள்ளனர். இவர்கள்தான் ஈரோடு கிழக்கு மக்களுக்கு நன்மை செய்ய போகிறார்களா..? காலை முதல் மாலை வாக்காளர்களை வரை அடைத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர். எனவே சித்திரவதை செய்யும் அவர்களுக்கு  தோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்ட வேண்டும்" என தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS allegation DMK harassing voters in Erode East


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->