பெண்கள் வெளியே செல்ல முடியாத சூழல் - திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை!
Environment where women cannot go out Annamalai harshly criticized the DMK government
காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று அண்ணமலை கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;”திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று வேதனை தெரிவித்தார் .மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் திமுக அரசின் மீதும், சட்டத்தின் மீதும், குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.”
இவ்வாறுஅண்ணாமலை சார்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Environment where women cannot go out Annamalai harshly criticized the DMK government