இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 05-ஆம் தலைமுறை போர் விமானங்கள் உருவாக்க மத்திய அரசு தீவிரம்..! - Seithipunal
Seithipunal


நம் நாட்டின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணியை கைப்பற்ற, ஏழு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

பாகிஸ்தான் போன்ற நமது அண்டைய டை நாடுகளால் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. இந்நிலையில், எல்லைகளை பாதுகாக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை படைகளில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுயசார்பு கொள்கையின்படி அதனை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டி.ஆர். டி.ஒ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் அதிநவீன நடுத்தர மேம்பட்ட போர் விமானங்களை வடிவமைத்து வருகிறது.

இந்நிலையில், இதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, 'எல் அண்ட் டி. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், டாடா அட் வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமி டெட், அதானி டிபென்ஸ்' உட்பட ஏழு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் அளிக்கும் திட்ட மதிப்பீட்டின்படி, 'பிரம்மோஸ்' ஏவுகணை திட்டத்தலைவர் சிவதாணு பிள்ளை தலைமையிலான குழு ஆய்வு செய்து, ராணுவ அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி, இரண்டு நிறுவனங்களை இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தத்தை வழங்க நடவடிக்கை எடுக்சுப்படும்.

அதாவது, சக்திவாய்ந்த இரண்டு இன்ஜின்களுடன், ஒருவர் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், உட்புறத்தில் 1.300 கிலோ எடையிலும், வெளிப்புறத்தில் 5,500 கிலோ எடையிலான வெடிப்பொருட்களை எடுத்து செல்லவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் வசதி ஏற்படுத்தப்பவுள்ளன.

அத்துடன், 6,500 கிலோ எடையிலான எரிபொருட்களை செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.  இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, இந்திய விமானப்படையில் 2035-ஆம் ஆண்டுக்கு முன் இணைக்கும் நோக்கில் 125 போர் விமானங்களை தயாரிக்க, 2 லட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே  இந்த வகை போர் விமானங்களை வைத்துள்ளன. விரைவில் இந்தியாவையும் இந்த பட்டியலில்  இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central government is serious about developing 5th generation fighter jets


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->