திமுகவின் கதை முடிந்துவிட்டது என எதிரிகள் நினைக்கிறார்கள்...அனால் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை திமுக...! - மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு...! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் நடைபெற்ற பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, தி.மு.க.வின் எதிர்கால அரசியல் பயணம் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து உணர்ச்சிமிகுந்த கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"தேர்தல் தோல்விகள் எதுவும் தி.மு.க. இயக்கத்தை சிதைக்க முடியாது. வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையுடன் நின்று போராடக்கூடிய உறுதியான தொண்டர் படையைத்தான் தி.மு.க. கொண்டுள்ளது.

ஆகவே யாரும் மனச்சோர்வோ சோகமோ அடைய வேண்டிய அவசியமில்லை.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையே தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த சாதனைகளின் தடத்தை யாராலும் அழிக்க முடியாது. மக்கள் வாழ்வில் தி.மு.க.வின் திட்டங்கள் உயிரோட்டமாக இருக்கும் வரை, நமது ஆட்சியின் சுவடுகளும் நிலைத்திருக்கும்.

அவற்றை மாற்றவோ தடுக்கவோ எவராலும் இயலாது.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தற்போது அடித்தள பணிகளை தொடங்கியுள்ளது. சமீபத்திய தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

மக்கள் மனநிலையை ஆழமாக புரிந்துகொண்டு புதிய அரசியல் பயணத்தை வடிவமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நாம் கடுமையாக உழைத்து தேர்தலை சந்தித்தோம். ஆனால் எந்த அடிப்படை அரசியல் பணிகளும் இல்லாமல் மற்றவர்கள் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பாக சமூக வலைதளங்கள், அதிலும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை பயன்படுத்தி ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சிறுவர்களையே பிரசார கருவிகளாக பயன்படுத்தியுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணையப் பயன்பாட்டை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

தி.மு.க.வின் அரசியல் பயணம் முடிந்துவிட்டதாக நமது இன எதிரிகள் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்த இயக்கம் ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்தபோதும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்திருக்கிறது.

அதுவே தி.மு.க.வின் வரலாறும் உயிர்ப்பும் ஆகும்.மீண்டும் தி.மு.க. தமிழக ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றும் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enemies think that story DMK over but DMK phoenix rising from ashes MK Stalin dramatic speech


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->