“விஜய்யை பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன்” – தரங்கெட்ட ஆளு ரஜினிகாந்த் இல்லை! ரஜினிகாந்த் பளிச்சென பதில்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் எழுச்சி குறித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். விஜய் முதல்வராக பதவியேற்றதை பார்த்து தனக்கு எந்தவித பொறாமையும் இல்லை என்றும், அது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், “விஜய்க்கும் எனக்கும் 25 வயது வித்தியாசம் இருக்கிறது. நான் எப்படி அவரை பார்த்து பொறாமைப்படுவேன்? விஜய்யுடன் நான் போட்டியிட்டால் எனக்கு நல்லது இல்லை. அவர் என்னுடன் போட்டியிட்டால் அவருக்கும் நல்லது இல்லை” என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும், “இந்த 52 வயதில் எம்ஜிஆர், என்டிஆர் போன்ற தலைவர்களின் சாதனைகளை முறியடித்து விஜய் முதலமைச்சராகியிருப்பது எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தை தான் கொடுக்கிறது. அது பொறாமை அல்ல” என்றார்.

1996-ஆம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஆன்மிக அரசியல் குறித்து அறிவித்திருந்த அவர், பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்தார்.

இந்நிலையில், “நான் அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சராகியிருப்பேன்” என்றும் ரஜினிகாந்த் கூறினார். அதிமுக - திமுக கூட்டணிக்காக தானே முயற்சி செய்ததாகவும், விஜய் முதல்வரானது பிடிக்கவில்லை என்றும் சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு தரம் கெட்ட மனிதர் நான் இல்லை. கமல் ஹாசன் முதலமைச்சராகியிருந்தாலும் கூட நான் மகிழ்ச்சிதான் அடைவேன். தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்று உங்களை சந்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

விஜய்யை சிறுவயதிலிருந்தே பார்த்து வருவதாக கூறிய ரஜினிகாந்த், “பாஜக, திமுக, அதிமுக போன்ற பலம் வாய்ந்த அரசியல் சக்திகள் இருக்கும் சூழலில் தைரியமாக களமிறங்கி வெற்றி பெற்றிருப்பது பெரிய விஷயம். மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவர் நல்லாட்சியை வழங்குவார் என்று நம்புகிறேன்” என வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சு, கடந்த சில நாட்களாக பரவி வந்த பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will not be jealous of Vijay Rajinikanth is not a bad person Rajinikanth brilliant reply


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->