'பஸ்சை நிறுத்துங்கப்பா'...கெஞ்சிய இளம்பெண்...! கண்டக்டர் செய்த காரியம்! - அடுத்து நடந்த பகீர் ட்விஸ்ட்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மாங்காவு பகுதியில் இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர், மாங்காவு அருகிலுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக பேருந்தை நிறுத்துமாறு நடத்துனரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் அதிகாரப்பூர்வ நிறுத்தம் இல்லையென நடத்துனர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பெண் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் பேருந்து நிறுத்தப்படாததால், நேரடியாக ஓட்டுநரிடம் சென்று மருத்துவமனை முன்பாக இறக்கிவிடுமாறு பலமுறை கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அங்கு நிறுத்தம் கிடையாது என ஓட்டுநரும் பேருந்தை தொடர்ந்து இயக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த பெண், நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தனது கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதன் பின்னர், பேருந்தில் அவசரகால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சுத்தியலை திடீரென எடுத்த அந்த பெண், ஓட்டுநர் இருக்கையின் அருகிலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து, இந்த விவரம் நெடுமங்காடு பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கசபா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், உடைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.அப்போது அந்த பெண், “கோபத்தை கட்டுப்படுத்தலாம்; ஆனால் இயற்கை உபாதையை அடக்க முடியாது.

கழிவறை செல்ல வேண்டிய அவசரநிலை ஏற்பட்டதால் தான் பேருந்தை நிறுத்துமாறு கேட்டேன். ஆனால் நடத்துனரும் ஓட்டுநரும் மறுத்துவிட்டனர். அதனால் வேறு வழியின்றி கண்ணாடியை உடைக்க நேர்ந்தது” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், சேதமடைந்த கண்ணாடிக்கான இழப்பீட்டை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து போக்குவரத்து கழகத்திற்கு இருபத்தெட்டாயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வசூலிக்கப்பட்டதுடன், அவரை எச்சரித்து அனுப்பிவைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், பேருந்தில் பயணம் செய்த சிலர் தங்களது கைப்பேசியில் பதிவு செய்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Please stop bus young girl begged What conductor did next twist


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->