43 ஆண்டு திரைப்பயணத்தை முடித்துக்கொண்ட கே. ராஜன்!திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம்! - Seithipunal
Seithipunal


தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என தமிழ் திரையுலகில் பல முகங்களுடன் செயல்பட்டு வந்த கே. ராஜன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 85 வயதான அவர், இன்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பிறந்த கே. ராஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் 1983-ஆம் ஆண்டு ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர், 1991-ஆம் ஆண்டு ‘நம்ம ஊரு மாரியம்மா’ திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இயக்குநர் செந்தில்நாதனின் ‘தங்கமான தங்கச்சி’ படத்திற்கு எழுத்தாளராக பணியாற்றிய கே. ராஜன், பின்னர் நடிகராகவும் திரையுலகில் தடம் பதித்தார். ‘பாம்பு சட்டை’, ‘துணிவு’, ‘பகாசூரன்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.

தனது மகன் பிரபுகாந்தை ‘அவள் பாவம்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய கே. ராஜன், பின்னர் அவரை ‘டபுள்ஸ்’ படத்தில் வில்லனாகவும் நடிக்க வைத்தார். அதன்பிறகு பிரபுகாந்த் தயாரிப்பாளராக மாறி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அடிக்கடி பங்கேற்று தன்னுடைய நேர்மையான மற்றும் வெளிப்படையான கருத்துகளால் கவனம் ஈர்த்தவர் கே. ராஜன். திரைப்படத் துறையின் பல பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக பேசி வந்த அவர், திடீரென இப்படியான முடிவை எடுத்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே. ராஜன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கையில் எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தனிமை அதிகரிக்கும் நேரங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல நிபுணர்களிடம் உதவி கேட்பது மிகவும் முக்கியம். நம் உயிர் விலைமதிப்பற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

K Rajan ends 43 years of film career A tragedy that shocked the film industry


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->