கோட்டையில் பறக்கும் உத்தரவுகள்! அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தீவிர ஆலோசனை...! - புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பா...?
Chief Minister Joseph Vijay holds intensive consultations ministers there possibility new projects being announced
சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில நிர்வாகத்தின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள், நிர்வாக மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தங்களது பொறுப்புத் துறைகளில் அமைச்சர்கள் எவ்வாறு செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும், மக்கள் குறைகளை எந்த முறையில் விரைவாக தீர்க்க வேண்டும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகத்தை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Chief Minister Joseph Vijay holds intensive consultations ministers there possibility new projects being announced