வந்தே பாரத் ரெயிலில் அவசர கதவை திறந்த ஊழியர்கள்! பறிபோன உயிர்! - Seithipunal
Seithipunal


சென்னை, கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பவுலேஷ் (வயது 70) இவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர். இவரும் இவரது மனைவியும் வந்தே பாரத் ரயிலில் சி3 பெட்டியில் கடந்த 26 ஆம் தேதி ஈரோட்டிற்கு சென்றனர். 

சேலத்திற்கு மாலை 6 மணிக்கு சென்ற வந்தே பாரத் ரயில் 4வது பிளாட்பார்மில் நின்றது. அப்போது பவுலேஷ் இருக்கையில் இருந்து எழுந்து அவசர கதவு அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென கதவு திறந்ததும் பவுலேஷ் தவறி விழுந்தார். 

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவுலேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தாத நிலையில் எப்படி தானாக திறந்தது ஏன ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

கோவை புறப்பட்டுச் சென்று ரெயிலின் சி3 பெட்டியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ரயில்வே நிலையப் பகுதியில் இருந்த 2 ரயில்வே ஊழியர்கள் அவசர கதவை திறந்து 4வது பிளாட்பார்மில் தண்டவாள பாதைகளில் ஏறி 5வது பிளாட்பார்மில் இறங்கினர். 

இதனால் பவுலேஷ் கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரயில்வே ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்திய போது அவர்கள் சேலம் ரயில்வே நிலையத்தில் பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா என என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கோட்ட மேலாளர் உடனடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employees opened emergency door Vande Bharat train passenger died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->