வனப்பகுதியில் கிடந்த யானை தந்தங்கள்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Elephant tusks lying forest
தென்காசி, புளியரை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாசித்து வருகின்றன. அச்சன்கோவில் அருகே உள்ள தென்மலை மயிலாடும் பாறை பகுதியில் பிளாஸ்டிக் சரக்கு மூட்டை ஒன்று நேற்று முன்தினம் கிடந்துள்ளது.
அதனை மீனவர்கள் சிலர் சந்தேகத்துடன் எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் யானை தந்தம் ஒன்று இருந்துள்ளதால் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக இது குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானை தந்தத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புனலூர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் யானையின் ஒரு தந்தத்தை காட்டு பகுதியில் தூக்கி வீசியது தெரிய வந்தது.

அவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ், பிரசாத் உள்ளிட்ட 4 பேருடன் சரத் சேர்ந்து வனப்பகுதிக்குச் சென்ற போது இறந்த நிலையில் கிடந்த யானையின் உடல் இருந்தது. அதிலிருந்து இரண்டு தங்கங்களையும் இவர்கள் திருடியுள்ளனர்.
அதில் ஒரு தந்தத்தை வீட்டில் வைத்துவிட்டு மற்றொரு தந்தத்தை காட்டு பகுதியில் தூக்கி வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் சரத் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றொரு தந்தத்தையும் வனத்துறையினர் கைப்பற்றினர். பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்து புனலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Elephant tusks lying forest