அடக்கடவுளே! மின் இணைப்பு துண்டித்து டிரான்ஸ்பார்மர் திருட்டு...! – கிராம மக்கள் அதிர்ச்சி
Electricity connection cut off and transformer stolen Villagers shocked
திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில், வயல்வெளி அருகே புதிதாக நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் மீது மர்ம திருடர்கள் கண் வைத்தனர்.இதில் நேற்று இரவு, மின் இணைப்பை துண்டித்துவிட்டு, டிரான்ஸ்பார்மரை தனியே கழற்றி எடுத்து சென்றனர்.
இதையடுத்து சில தூரத்தில் அதின் மேல் பகுதியை தூக்கி வீசி, உள்ளே இருந்த விலை உயர்ந்த செம்புக் கம்பிகளை மட்டும் பறித்து சென்றனர்.

இந்நிலையில்,இன்று அதிகாலையில் சம்பவ இடத்துக்கு வந்த கிராம மக்கள், டிரான்ஸ்பார்மர் மாயமாகியதும், அதனால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர்.உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்த மின் வாரிய அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்கும் பணி தொடங்கினர்.
இதற்கிடையில், திருட்டு சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மேலும், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மரை பறித்துக் கொண்டுசென்ற கும்பலை பிடிக்க தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Electricity connection cut off and transformer stolen Villagers shocked