மீண்டும் உயரும் மின்கட்டணம்? ஜுலை 1 முதல் 4.7% அதிகரிக்க வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மின்சார துறையின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த தீர்மானித்தது. இதற்காக கடந்த 2022 ஜூலை 18ம் தேதி ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 10% முதல் 35% வரை மின் கட்டணத்தை உயர்த்தியது.

வீடுகளுக்கு 400 யூனிட் வரை1 யூனிட்டிற்கு ரூ.4.50, 401 – 500 வரை யூனிட்டிற்கு ரூ.6, 501 – 600 வரை யூனிட்டிற்கு ரூ.8, 601 – 800 வரை யூனிட்டிற்கு ரூ.9,  801 – 1,000 வரை யூனிட்டிற்கு ரூ.10, 1,001 மேல் யூனிட்டிற்கு ரூ.11 என கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதே போன்று உயரழுத்த பிரிவில் பெரிய தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட் ரூ.6.35 இருந்து ரூ.6.75 ஆகவும், கிலோ வாட்டிற்கு மாதம் ரூ. 350 ஆக இருந்த தேவை கட்டணம் ரூ. 550 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதேபோல் அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஆண்டு மின்சார துறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், 2026 – 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் 2023 ஏப்ரல் நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் 4.70% உள்ளது. இது 6% அளவுடன் ஒப்பிடும்போது குறைவு என்பதால் அடுத்த மாதம் முதல் அனைத்து பிரிவு கட்டணமும் 4.70 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணத்தில் 4.70 சதவீதம் உயரும்.

தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில், உயர்த்திய மின் கட்டணத்தையே செலுத்த முடியாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்த இருப்பது பொதுமக்களை கலங்கடிக்கச் செய்துள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்கிறது. எனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணையை நிறுத்தி வைக்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electricity bills again 4.7% likely to increase from July1


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->