'பாஜகவை இந்தியாவை ஆள அனுமதிக்க கூடாது; மத்தியிலும் 2029 வரை நீடிக்கக் விடகூடாது'; மம்தா பானர்ஜி சூளுரை..!
Mamata Banerjee vows that the BJP government at the Centre must not be allowed to continue until 2029
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன, இவர் மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக பரவலாக அறியப்பட்டவர்.
இந்த சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி I-PAC நிறுவனத்திற்கு சென்றார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதன் போது தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக தரவுகளை திருட அமித்ஷா வால் செய்யப்பட்ட சதி வேலை என்றும் இதனால் சோதனை நடத்தப்பட்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அமலாக்கத்துறைக்கு எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணியை மம்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்ட பேணியின் போது மம்தா பானர்ஜி பேசும் போது கூறியதாவது:
தன்னை யாராவது அரசியல் ரீதியாக தாக்க முயற்சி செய்தால், தான் அரசியல் ரீதியாக புத்துணர்ச்சி பெறுவேன் என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், மக்கள் அதிகாரத்தை திருடி மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்றும், அவர்கள் அதை பெங்காலில் செய்ய விரும்புகிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், நேற்று I-PAC நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையின்போது, அவர்கள் என்னுடைய கட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) வியூகங்களை திருட முயன்றனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது எங்களுடைய எம்.பி.க்களை போலீஸ் தாக்கியதாகவும், பெங்காலில் பாஜக சிகப்பு கம்பளம் வரவேற்பை பெறுகிறது. தான் நேற்று செய்ததில் எந்த தவறும் இல்லை என்றும், என்னுடைய கட்சி தரவுகளை அவர்கள் திருட முயன்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியின் மூத்த பாஜக தலைவர்கள் நிலக்கரி சுரங்க ஊழல் பணத்தை பெறுகிறார்கள் என்றும், தேவைப்பட்டால் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும், பெங்கால் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். மத்தியில் பாஜக அரசு 2029 வரை தொடரக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், யாராவது ஒருவர் என்னை கொல்ல வந்தா், தற்பாதுகாப்பு உரிமை எனக்கு இல்லையா? என்று மம்தா கேள்வி எழுப்பியதோடு, எம்.பி. கல்யாண் பானர்ஜியை பார்த்து, நம்முடைய அடுத்த இலக்கு, தேர்தல் ஆணைய அலுவலக போராட்டமாக இருக்கட்டும் என்றும், பெங்கால் வெற்றிக்குப் பிறகு நாம் டெல்லியில் வெற்றி பெற வேண்டும் என்றும், இந்தியாவை ஆளு பாஜகவை அனுமதிக்கக் கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee vows that the BJP government at the Centre must not be allowed to continue until 2029