தமிம் இக்பால் மற்றொரு நிரூபிக்கப்பட்ட இந்திய உளவாளி; வங்கதேச கிரிக்கெட் இயக்குனர் ஆவேசம்..!
Bangladesh cricket director angrily claims Tamim Iqbal is an Indian spy
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 06 ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடைபெறுவதால் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2026- ஆம் ஆண்தூக்கணா ஐ பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் இடம் பிடித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன், அணியின் சி.இ.ஓ. ஷாருக்கானுக்கும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்த சூழலில், பிசிசிஐ, முஸ்தாபிசுர் ரகுமானை அணியில் இருந்து விடுக்க கொல்கத்தா அணியிடம் கேட்டுக்கொண்டதன்படி, கொல்கத்தா அணியும் அவரை விடுவித்துள்ளது. இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடுங்கோபம் அடைந்தது.

இதனையடுத்து, இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இந்தியாவுக்கு வெளியில் நடத்த வேண்டும் என ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்தது. அத்துடன், ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.
வங்கதேசத்தின் இந்த செயல்பாடு குறித்து, அந்நாட்டின் முன்னணி தொடக்க வீரரான தமிம் இக்பால், 'உலக கோப்பையில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் போர்டின் இயக்குனர் எம். நஸ்முல் இஸ்லாம், "இந்த முறை, வங்கதேச மக்கள் தங்களது சொந்தக் கண்களால், மற்றொரு நிரூபிக்கப்பட்ட இந்திய உளவாளியின் தோற்றத்தைக் கண்டனர்" என கடுமையாக சாடியுள்ளார்.
English Summary
Bangladesh cricket director angrily claims Tamim Iqbal is an Indian spy