சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரெயில்கள் ரத்து - காரணம் என்ன?
electric train service cancelled in chennai central to sooloorpettai and kummidipoondi
பராமரிப்புப் பணிக் காரணமாக அவ்வப்போது சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போது 21 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதாவது, சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 17-ந்தேதி காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10, மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1,15, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30, 3.15, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும், ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
electric train service cancelled in chennai central to sooloorpettai and kummidipoondi