மின்வேலியில் சிக்கி இருவர் பலி: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


ஆம்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் மூர்த்தி என்பவரது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 22), ஜெயக்குமார் (வயது 53) இருவரும் விவசாய நிலத்தின் வழியாக சென்றுள்ளனர். 

அப்போது மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து ஆம்பூர் பகுதியில் வனத்துறை எல்லையோர கிராமங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electric fence Two people killed 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->