வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாநகராட்சி ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


நூறு சதவீதம் வக்குப்பதிவை வலியுறுத்தி சென்னை அரசு பள்ளிகளில் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியும் 200 வார்டுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடையே 100 விழுக்காடு வாக்குப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மாநகரட்சி பள்ளிகளில், வண்ணக்கோலங்கள் வரைந்து 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electoral awareness


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->