ராமச்சந்திரனை ரவுண்டு கட்டும் ED! விடிய விடிய 2வது நாளாக தொடரும் சோதனை!
ED raid continues 2ndday at Ramachandran related locations
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய அமலாக்கத் துறையின் சோதனையானது விடிய, விடிய இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நான்கு இடங்களில் சோதனை தொடங்கிய நிலையில் அது படிப்படியாக 9 இடங்களுக்கு விரிவு படுத்தப்பட்டது. அதில் 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில் கந்தர்வகோட்டை, அறியானிப்பட்டி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளது. எனினும் தற்போது எஞ்சியுள்ள 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக முழுவதும் நீர்வளத்துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகம், மணல் குவாரி அதிபர்கள்,அவர்களின் உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகம், தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கனிமவளத் துறை அதிகாரி வீட்டில் கைப்பற்ற வட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் அமைந்துள்ள கனிமவளத்துறை அலுவலகத்திலும் அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ED raid continues 2ndday at Ramachandran related locations