கரூரில் அமலக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி ஆய்வு!! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அரசு நிர்ணயத்த அளவைவிட மணல் அள்ளியது, அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் போலி ரசீதுகள் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் மல்லம்பாளையம் மற்றும் நன்னையூர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் பத்தாம் தேதி நடைபெற்ற சோதனை போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லம்பாளையம் மற்றும் நன்னையூர் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளியது தொடர்பாக விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இரண்டு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு காவிரி ஆற்றில் இறங்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவேரி ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா உதவியோடு மணல் அள்ளப்பட்ட அளவு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED officials inspect again Karur sand quarry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->