அனுமதிக்கே லஞ்சமா.!! போட்டுக் கொடுத்த ஒப்பந்ததாரர்? வசமாக சிக்கிய பொறியாளர்!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான அனுமதி வழங்க லஞ்சம் பொறப்படுவதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூத்துக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் செயற்பொறியாளர் தம்பிரான் தோழனின் உதவியாளரிடமிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து தம்பிரான் தோழனின் உதவியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையால் தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DVAC raid in PWD executive engineer in Thoothukudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->