இவர்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?... துரைமுருகன் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளரான துரைமுருகன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு "திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும். எங்களுக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை.

எங்களுடைய ஓட்டு வங்கியை அது பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது. கூட்டணியை விட்டு போனால் பிரச்சனை இல்லை. 

காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம் பதில் சொல்லும் என்று டி ஆர் பாலு தெரிவித்து இருக்கின்றார். பதிலையே கூறிவிட்டேன்." என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவரான கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது," ஸ்டாலினுக்கு நான் பொங்கல் வாழ்த்து கூறினேன். எங்களுடைய சொந்த கருத்தால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. எப்பொழுதும் காலம் நல்ல பதிலைத் தான் கூறும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

duraimurugan speech about congress dmk alliance


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->