புதுச்சேரி திமுக-வில் அதிரடி திருப்பம்...! சட்டமன்றத் தலைவராக நாஜிம் நியமனம்! - தொண்டர்கள் கொண்டாட்டம்...!
dramatic turn Puducherry DMK Nazim appointed Assembly Speaker Volunteers celebrate
புதுச்சேரி மாநில திமுக சட்டமன்றக் கட்சிக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பல முக்கிய பொறுப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளரும், கழக கொள்கைப் பரப்புச் செயலாளருமான எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி. தலைமையிலும், புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் ரா.சிவா முன்னிலையிலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கழக உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த ஆலோசனையின் முடிவில், புதுச்சேரி மாநில திமுக சட்டமன்றக் கட்சிக்கான புதிய நிர்வாகிகளை நியமிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஏ.எம்.எச்.நாஜிம், எம்.எல்.ஏ., சட்டமன்றக் கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறார். துணைத் தலைவராக ஆர்.ஆர்.செந்தில்குமார், எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கொறடா பொறுப்பில் ஏ.கே.ரமேஷ் என்ற செந்தில், எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளராக வி.கார்த்திகேயன், எம்.எல்.ஏ.வும், பொருளாளராக விக்னேஷ் கண்ணன், எம்.எல்.ஏ.வும் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய நியமனங்கள் மூலம் புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற அணியில் புத்துணர்வும், அரசியல் செயல்பாடுகளில் புதிய வேகமும் உருவாகும் என கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
dramatic turn Puducherry DMK Nazim appointed Assembly Speaker Volunteers celebrate