கொரோனா பரவல் மையத்தினை மூடுவது எப்போது?! தமிழக அரசை கேட்கும் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை குடிப்பகங்களை மூடுவதற்கு  தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் அத்தியாவசியம் இல்லை. ஆனால், கட்டுப்பாடுகள் இன்றி அவை செயல்படுகின்றன. அவை உடனடியாக மூடப்பட வேண்டும்!

மது குடிப்பகங்கள் தான் கொரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன. ஆனாலும்  அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை குடிப்பகங்களையும் மூடுவதற்கு  தமிழக அரசு ஆணையிட வேண்டும்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மது குடிப்பகங்கள் தான் கொரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன என டாக்டர் ராமதாஸ் சொல்வதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று (சன 09) முழு ஊரடங்கு என்பதால், நேற்று (சன 08 )ஒரே நாளில் தமிழகத்தில் 218 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடந்திருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மக்களின் நலன் கருதி தமிழக அரசு மதுக்கடைகளை மூடுமா? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR Ramadoss Tweet about Close tasmac


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->