"தேங்க்யூ" என்ற ஆங்கில வார்த்தையால் நடந்த மிகப்பெரிய புரட்சி பற்றி தெரியுமா? மருத்துவர் இராமதாஸ் கொடுக்கும் எச்சரிக்கை!
Dr Ramadoss Say About Tank you And Merci
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் 'தமிழைத் தேடி இயக்கம்' சார்பில், தனித்தமிழ் சொற்கள் அறிவோம் பதாகை திறப்பு விழாவும், கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்கக் கோரி, சென்னை பாண்டி பஜாரில் (சௌந்தர பாண்டியனார் அங்காடி தெரு) பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வணிகர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாம் நிற்கக்கூடிய இந்த அங்காடி "பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியனார்" அங்காடி. மிக புகழ்பெற்றவர் அவர். பெரியாருடன் இருந்து இணைந்து செயல்பட்ட தன்மானத் தமிழன்.
இந்த தெருவுக்கு 'சௌந்தரபாண்டியர் அங்காடி தெரு' என்று இருந்த பெயரை, நாம் எல்லோரும் சேர்ந்து 'பாண்டி பஜார்' என்று மாற்றிவிட்டோம்.

1977-ல் ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில் தமிழ் எழுத்தை பெரிதாகவும், பிறமொழி எழுத்துக்களை சிறியதாகவும் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அது தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனை வலியுறுத்தி சென்னையில் இருந்து என்று சொல்வதற்கு பதிலாக லண்டனில் இருந்தே சொல்லலாம். லண்டனில் இருந்து சங்கம் வளர்த்த மதுரைக்கு 'தமிழை தேடி சென்றேன்' ஆனால் தமிழை எங்கும் பார்க்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இதே போன்று பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன் வைத்து நாங்கள் கடைக்கடையாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்தோம். ஆனாலும் எந்த பயனும் இல்லை.
அதனால் மீண்டும் இதை நாங்கள் செய்கின்றோம். ஏனென்றால் அனைவரும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வணிகர் சங்கத்தின் உடைய மாநில தலைவர் விக்கிரமராசாவுக்கும், ஏனைவர்களுக்கும் நான் மடல் எழுதி உள்ளேன். அவரும் உங்கள் சொல் படியே நாங்கள் செய்கிறோம் என்றார்கள். வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
அதோடு நான் தமிழை தேடி பயணம் செய்யும்போது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத்துறை இந்த ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதனால் நிச்சயமாக வணிகர்கள் இதனை செய்வார்கள்.
வணிகர்கள் வணிகர்கள் இல்லாமல் பொருளாதாரம் இல்லை. கடல் கடந்து சென்று வணிகம் செய்யும்போது அவர்கள் தமிழையும் வளர்த்தார்கள். அங்கே அந்த நாடுகளில் அதற்கு பல சான்றுகளை சொல்ல முடியும். ஆனால் அதை சொல்வதற்கு நேரம் போதாது.

அந்த வகையில் வணிக பெருமக்களாகிய நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள். ஏனென்றால் தமிழ் இப்பொழுது அழிவின் விளிம்பில் நிற்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் இருக்காது. எனவே அனைவரும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். சென்னை என்ற லண்டன் மாநகரிலிருந்து மதுரைக்கு எட்டு நாள் பரப்புரை சென்ற போது நல்ல வரவேற்பு இருந்தது.
இங்கிலாந்து நாட்டில் இருந்த ஒரு வார்த்தை, பிரெஞ்சு நாட்டிற்கு வந்ததற்காக பெரிய புரட்சி ஏற்பட்டது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற தேங்க்யூ என்ற வார்த்தை தன அந்த புரட்சிக்கு காரணம். நாம் வாழ்வது லண்டன் என்பதால் நீங்கள் இதனை பயன்படுத்திக்கிறீர்கள்.
அந்த தேங்க்யூ என்ற வார்த்தை பிரான்ஸ நாட்டுக்குள் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு புரட்சி நடந்தது. அதன் பிறகு பிரெஞ்சில் அந்த வார்த்தைக்கு என்ன சொல்ல வேண்டும் என்றால் 'மெர்சி'. மெர்சி என்றால் தேங்க்யூ. அதன் பிறகு தேங்க்யூ மீண்டும் இங்கிலாந்து சென்று ஓடி ஒளிந்து விட்டது. பிரான்ஸ் நாட்டின் புரட்சி காரணமாக அந்நாட்டில் மீண்டும் 'மெர்சி' வார்த்தை பயன்பாட்டுக்கு வந்தது. புரட்சி வெற்றியடைந்து விட்டது. இது ஒரு உதாரணம் தான். இப்படியாக நிறைய உதாரணங்களை கூற முடியும்.
நாம் இன்று எவ்வளவு வேறு மொழி வார்த்தைகளை பயணப்படி கொண்டு இருக்கிறோம் என்று நமக்கே தெரியும். இனி வரும் காலங்களில் நாமே நம் மொழியை பாதுகாக்க நல்ல சுத்தமான தமிழில் பேசுவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Ramadoss Say About Tank you And Merci