உடனே இதற்க்கு தடைச்சட்டம் இயற்றுங்கள் - தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கொன்று எரிப்பு - குற்றங்களின் பிறப்பிடமாகும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர், அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். 

இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், பின்னர் ஆன்லைனில் சூதாட மற்றவர்களை கொலை செய்தார்கள், இப்போது ஆன்லைனில் சூதாடியவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படியாக பலவகையான குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம். இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக  பேருருவெடுக்கும்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Say About online game ban law april 12


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->