கார்ல் மார்க்சு குறித்த தவறான விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா...? ஆளுநர் அவதூறுகளைப்  பரப்பக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது.

கார்ல் மார்க்சு எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. 
கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன!

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பா.ம.க.வின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர்.

கார்ல் மார்க்சு குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது, அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்சு குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Condemn to TN Governor RN Ravi 24022023


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->