அதிசயமா..! அபத்தா..! ஆழ்கடலிலிருந்து கரைக்கு திருப்பிய பேரழிவு மீனாக பேசப்படும் 'டூம்ஸ்டே மீன்' பாம்பனில் பிடிப்பு...!
doomsday fish which said catastrophic fish brought back shore from deep sea caught Pamban
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் கடலோரம் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது. மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள், நேற்று கரை திரும்பியபோது தங்கள் வலையில் சிக்கியிருந்தது சாதாரண மீன் அல்ல. அரிய வகை “டூம்ஸ்டே மீன்” தான் என்று கண்டுபிடித்தனர்.

சுமார் 5 அடி நீளமுடைய இந்த ஆழ்கடல் மீன், பொதுவாக ஆசிய கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு அபூர்வ இனமாகும். இதுபோன்ற மீன்கள் கடலின் அடித்தளத்தில் வாழ்வதால், மனிதர்களால் அரிதாகவே காணப்படுகின்றன.
மேலும், ஜப்பானிய மக்களிடையே “டூம்ஸ்டே மீன்” பற்றிய ஒரு வினோத நம்பிக்கை நிலவுகிறது.இம்மீன் கரை ஒதுங்கினால், அது பெரிய இயற்கை பேரழிவுக்கான முன்னெச்சரிக்கை என கருதப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகள் இதை வெறும் மூடநம்பிக்கை என்று நிராகரிக்கின்றனர்.
எதுவாயினும், பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய இந்த அரிய ஆழ்கடல் உயிரினம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி,வியப்புக்கிடமாக, இப்படியொரு அரிய மீன் மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
English Summary
doomsday fish which said catastrophic fish brought back shore from deep sea caught Pamban