கனமழை காரணமாக சேலம் மேட்டூர் அணையின் இன்றைய நீர் வரத்து எவ்வளவு தெரியுமா...?
Do you know what water inflow of Salem Mettur Dam is today due to heavy rains
தொடர் மழையால் அதிக மழை பொழிவு உள்ள இடங்களில் மக்கள் ஸ்தம்பித்துள்ளன.இதில் கர்நாடக மாநிலத்திலுள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் பெங்களூரு, மங்களுரு,மைசூரு, குடகு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் எச்.டி.கோட்டை தாலுகாவிலுள்ள கபினி அணை மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவிலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.இந்த இரு அணைகளிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில்,நேற்று முன்தினம் 6,233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,698 கன அடியாக அதிகரித்தது.
இதில், இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,819 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், நேற்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்த நிலையில், இன்று நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும், நீர் இருப்பு 78.45 டி.எம்.சி.உள்ளது.அதுமட்டுமின்றி, அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
English Summary
Do you know what water inflow of Salem Mettur Dam is today due to heavy rains