உடலுக்கு புத்துணர்ச்சி தரும் முருங்கை கீரை சூப்.!!
murugai keerai soup recepie
தேவையான பொருட்கள்:-
முருங்கை கீரை
மிளகு,சீரகம்,கொத்தமல்லி அனைத்தும்
பூண்டு,சிறிய வெங்காயம்
மஞ்சள்தூள்
உப்பு
கறிவேப்பிலை
மிளகுத் தூள்
செய்முறை:-
முதலில் மிக்ஸி சாரில் சீரகம், கொத்தமல்லி, மிளகு, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை,
அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அடுப்பில் மண்சட்டி வைத்து 5 டம்ளர் தண்ணீரை ஊற்றி முருங்கைகீரை, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு, சீரகம்,கொத்தமல்லி, மிளகு உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்பு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும்.
சுமார் 20 நிமிடம் கீரையை வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டி மிளகு தூள் சேர்த்து பருகினால் சுவையான முருங்கை சூப் தயார்.
English Summary
murugai keerai soup recepie