2026ல் 7வது முறையாக திமுக ஆட்சி – ஸ்டாலின் உறுதி! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவரது கடிதத்தில் கூறியுள்ளதாவது:மருத்துவ ஓய்விலிருந்தபோதிலும் அரசு, கழக வேலைகளைச் செய்ததாக தெரிவித்தார்.தற்போது வரை 39 தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்துள்ளதாகவும், இந்தச் சந்திப்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் சாதனைகளை விவரித்து, திராவிட மாடல் அரசு அனைத்து குடும்பங்களுக்கும் நன்மை செய்து வருவதாக கூறினார்.தமிழ்நாடு வளர்ச்சி குறித்து மத்திய பாஜக அரசின் அறிக்கைகளே சாட்சியென குறிப்பிட்டார்.

அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்து:“தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையில்லாத அதிமுக, தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஊர் ஊராகச் சென்று பொய்களைப் பரப்புகிறார்,” என்றார்.

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து:முத்தமிழறிஞர் கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் மத்திய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற நாமும் அதே உணர்வுடன் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். தமிழுக்கு குறைந்த நிதியளிப்பு, சமஸ்கிருதத்துக்கு ஆயிரக் கணக்கில் கோடி ஒதுக்கீடு

'தேசிய கல்விக் கொள்கை 2020' மூலம் இந்தி திணிப்பு, குலக் கல்வி ஊக்குவிப்புகீழடி அகழாய்வின் முடிவுகளை மறைத்தல்ஆரிய பண்பாட்டை திணிப்பது போன்ற விடயங்களைக் குறிப்பிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு:ஆகஸ்ட் 7 அன்று அவரது நினைவு நாளை மாநிலமெங்கும் பெருமையுடன் கொண்டாட திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்."கலைஞர் புகழ் ஓங்குக! திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க!" என இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK to rule for the 7th time in 2026 Stalin confirms


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->