இது ஒரு அடக்குமுறை... அதை நங்கள் எதிர்க்கிறோம் - சாம்சங் நிறுவனத்திற்கு திமுக கூட்டணி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் வலியுறுத்தி இருந்தார்.

அதன் படி, இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை திமுக கூட்டணி கட்சி தலைவர்களான சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது:- "சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது ஒரு அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதன் அடக்குமுறையையே நாங்கள் எதிர்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk team support samsung company


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->