தமிழக கிராமங்களில் டாஸ்மாக் மதுவால் பேரழிவு - மதுவிலக்கு கோரும் ஸ்ரீதர் வேம்புவின் வேதனை பதிவு!
DMK Tasamac Sridhar vembu mk stalin tamilnadu
சென்னை: தான் வசிக்கும் கிராமப்புறப் பகுதியில் நடந்த ஒரு சோகமான நிகழ்வைச் சுட்டிக்காட்டி, கிராமப்புறங்களில் மதுப்பழக்கத்தால் ஏற்படும் சமூகப் பேரழிவுகள் குறித்து ஜோஹோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் பதிவு
தனது குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்துப் பதிவிட்ட ஸ்ரீதர் வேம்பு கூறியிருப்பதாவது:
"தான் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த உள்ளூர் செய்தி: ஒரு 71 வயது தந்தை தற்கொலை செய்து கொண்டார். ஏனெனில், அவரது 45 வயது மகன் சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். மகனின் அதிகப்படியான குடிப்பழக்கத்தால் அவரது மனைவி வருத்தப்பட்டதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்."

கிராமப்புற அவலம்:
"இந்த வகையான செய்திகள் இங்கே துரதிர்ஷ்டவசமாக அடிக்கடி வருகின்றன. நமது கிராமப்புறங்களில் பல மரணங்கள் மது தொடர்பானவை. குடும்பங்கள் மது மற்றும் கடனால் பேரழிவிற்கு உள்ளாகின்றன."
மதுவிலக்கு குறித்துக் கருத்து
தற்காலச் சமூகத்தில் மதுவிலக்கு கொள்கை குறித்துப் பேசிய அவர், "நவீன மக்கள் மதுவிலக்கு ஒருபோதும் வேலை செய்யாது என்று நினைக்கிறார்கள். ஆனால், மதுவால் ஏற்படும் சமூக அழிவை விட அபூரண மதுவிலக்கு சிறந்தது" என்று கருத்துத் தெரிவித்தார்.
மேலும், "குறைந்தபட்சம், மதுவிலக்கு சமூக ரீதியாக மது அருந்துவதை வெறுக்க வைக்கும்," என்றும் ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
DMK Tasamac Sridhar vembu mk stalin tamilnadu