தி.மு.க மாநிலத் துணைச் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!
DMK State Deputy Secretary house raided Income Tax officials
கோயம்புத்தூர், தி.மு.க இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் பொறியியல் கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 கார்களில் வந்த அதிகாரிகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். .
அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் என்பதும் இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK State Deputy Secretary house raided Income Tax officials