எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்துதிமுக–வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் புறக்கணித்து, பிற மாநிலத்தவர்கள் பயன்பெறும் வகையில் ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு மற்றும் வேலைவாய்ப்பில் அக்கறை காட்டாமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை கண்டித்தும், ஜிப்மர் நிர்வாக வேலை வாய்ப்பளிக்கும் தேர்வை ஜிப்மர் நிர்வாகமே நடத்த நடவடிக்கை எடுக்கவும், தற்போது அறிவித்துள்ள செவிலியர் மற்றும் குரூப் பி & சி பணியிடங்களில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜிப்மர் நுழைவு வாயிலில் இன்று காலை நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இலவச மருத்துவம் வழங்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும், வேலைவாய்ப்புக்கான தேர்வை ஜிப்மரிலேயே நடத்தக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், மு. பிரபாகரன், ப. செல்வநாதன், ந. தங்கவேலு, வீ. சண்முகம், கே.பி. இளம்பரிதி, பெ. பழநி, எஸ். எஸ். செந்தில்குமார், நா. கோபாலகிருஷ்ணன், ஜெ. வேலன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், செ. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், சி. சத்தியவேல், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், வர்த்தகர் அணி சு. ரமணன், மீனவர் அணி ந. கோதண்டபாணி, தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, விவசாய தொழிலாளர் அணி ப. தவமுருகன், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், அயலக அணி அ. ஷாஜகான், அணித் தலைவர்கள் ஆதிதிராவிட நலக்குழு மு. பழனிசாமி, தொமுச பொ. அங்காளன், துணைத் தலைவர்கள் மகளிர் அணி வெ. பிரியதர்ஷினி, மகளிர் தொண்டர் அணி ரா. விஜயலட்சுமி, ஆதிதிராவிட நலக்குழ அ. கதிரவன், மீனவர் அணி ம. குமணன், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஜே.ஆர். ராஜேஷ் (எ) சேவியர் ராஜேஷ், சுற்றுச்சூழல் அணி ஞா. நவீன் (எ) மணிகண்டன், வழக்கறிஞர் அணி பெ தாமோதரன், துணை அமைப்பாளர்கள் டாக்டர் ரோ. நித்திஷ், ம. ரெமிஎட்வின், தே. தாமரைக்கண்ணன், மு. உத்தமன், எரிக்ஸ், ந. கண்ணன், ரமா, ர. புஷ்பலதா, வீ. நல்குணா, ஜெ. தேன்மொழி, அ. காமாட்சி, ஏ. கல்யாணி, ஜோ. கஸ்தூரி, மு. அரசம்மாள், து. அன்பழகன், அ. சக்திவேல், சி. திருநாவுக்கரசு, அ. காளி, க. தெய்வேந்திரன், அய்யனார், சிவசுப்ரமணியன், உத்திராபதி, தமிழ்வாணன், கலிவரதன், சிவதாசன், சுரேஷ், கவுதம்பாஸ்கர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
English Summary
DMK protests against JIPMER administration