"கனகவதி"... சிறப்பு போஸ்டரை வெளியிட்ட காந்தாரா 2 படக்குழு...!
Kanagavathi team kantara 2 released special poster
கடந்த 2022-ம் ஆண்டு, கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் வெளியாகி தென்னிந்தியாவில் பெரும் வெற்றிபெற்றது.இதைத் தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வந்த நிலையில், தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.

இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்து.மேலும், படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை"ருக்மிணி வசந்தி"-ற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் 'கனகவதி' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
English Summary
Kanagavathi team kantara 2 released special poster