இது அங்க நடக்கிறதா? அல்லது இங்கு நடக்கிறதா?... அனிருத் உடன் cool-லாக விளையாடும் தோனி...!
Is this happening there Or is it happening here Dhoni playing cool with Anirudh
பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ''கூலி'' படம் வெளியாக இருக்கிறது.

இப்படம் வருகிற 14 -ம் தேதி வெளியாக இருக்கிற நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி கூட செம கூலாக பெடல் விளையாடிக் கொண்டு இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதனைக் கண்ட ரசிகர்கள், அனிருத் செம ஜாலியாக பெடல் விளையாடுவதை பார்த்தால் கூலி படத்தில் தனது வேலைகள் அனைத்தையும் அவர் முடித்துவிட்டார் போலத் தெரிகிறதே என்று இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதேபோல், தல தோனியுடன் இவர் இருப்பதால், ''இவர் ராஞ்சிக்குப் போனாரா? அல்லது அவர் சென்னைக்கு வந்துள்ளாரா?'' என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்து வருகிறது.
English Summary
Is this happening there Or is it happening here Dhoni playing cool with Anirudh