தலைவர் for a reason... படம் வெளியாகும் முன்பே வசூலை குவிக்கும் கூலி படம்...! முன்பதிவு ஜோரு...!
Thalaivar reason lucrative film that collect money even before release Bookings essential
இயக்குநர் ''லோகேஷ் கனகராஜ்'' மற்றும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ''கூலி''. அனிருத் இசையமைத்த இப்படத்தில் சௌபின் ஷாஹிர், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா,ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்,கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில்,திரைப்படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது.இந்நிலையில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது. மேலும்,படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50000 மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளாவில் இன்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும், ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.ஆச்சரியத்தக்க விதமாக 1 மணி நேரத்தில் 50000 -க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மாலை தமிழ்நாட்டிலும் முன்பதிவு தொடங்குகிறது.
இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு 75 வயது நடிகருக்கு இப்படி ஒரு ஹைப் வேறு எந்த மொழி நடிகருக்கும் இருந்தததில்லை. சூப்பர் ஸ்டார் For a Reason என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
Thalaivar reason lucrative film that collect money even before release Bookings essential