மஹிந்திராவின் மிகப்பெரிய டீலரான ஏஎம்பிஎல் குரூப்...மதுரையில் புதிய கிளை திறப்பு!
Mahindras largest dealer AEMPL Group opening a new branch in Madurai
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய ரீடெய்ல் பெருநிறுவனங்களுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் ஆட்டோமோட்டிவ் மேனுஃபேக்சரர்ஸ் (ஏஎம்பில் குழுமம்), மதுரை மாநகரில் அதன் புதிய மஹிந்திரா வர்த்தக வாகன டீலர்ஷிப் தொடங்கப்பட்டிருப்பதை இன்று பெருமையுடன் அறிவித்திருக்கிறது.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி தளபதி அவர்கள் இந்த புதிய ஷோரூம்-ஐ திறந்து வைத்தார். மஹிந்திரா நிறுவனம் மற்றும் ஏஎம்பிஎல் குழுமத்தின் மூத்த அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மதுரை நகரின் முக்கிய பகுதியான மாட்டுத்தாவணியில் பாண்டி கோவில் சுற்றுவட்ட சாலையில் குரு மருத்துவமனை அருகே இந்த ஷோரூம் அமைந்திருக்கிறது. மதுரை வடக்கு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அணுகலையும், சேவையையும் மேம்படுத்த வேண்டுமென்ற இலக்கோடு இந்த அமைவிடத்தில் இது நிறுவப்பட்டிருக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சந்தைக்கு சுமையேற்றி அனுப்பும் போக்குவரத்து பணியை செய்யும் பிரிவுகளிலிருந்து வர்த்தக வாகனங்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும். 3500 சதுர அடி என்ற விரிந்து பரந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த நவீன ஷோரூம், மஹிந்திராவின் புகழ்பெற்ற வர்த்தக வாகனங்கள் அணிவரிசையை, அவற்றை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மிக அருகில் சௌகரியமாக பார்வையிடுவதற்கான வசதியை வழங்குகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு மிக செளகரியமான அனுபவம் கிடைப்பதை உறுதி செய்யும். மதுரை மாநகரில் பொதுவாக நிலவும் அதிக வெப்பமான மற்றும் ஈரப்பதமான பருவநிலையை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதி இந்த ஷோரூமில் செய்யப்பட்டிருக்கிறது.
ஏஎம்பிஎல் குழுமம், இந்த ஆண்டில் இந்தியாவில் அதன் விரிவான செயல்தடத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. இந்நாட்டில் மஹிந்திரா பிராண்டின் மிகப்பெரிய விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுக்கான பார்ட்னர் என்ற தனது அந்தஸ்தை இக்குழுமம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது, தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய 6 மாநிலங்களில் 138 மஹிந்திரா தொடுமுனைகள் என்ற பரந்த வலையமைப்புடன் இக்குழுமம் இயங்கி வருகிறது. நிதி ஆண்டு 2025-ல் மட்டும் 37000-க்கும் அதிகமான மஹிந்திரா வாகனங்கள் விற்பனையை இக்குழுமம் பதிவு செய்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 28 மஹிந்திரா தொடுமுனைகளை நிர்வகித்து வரும் இக்குழுமத்தின் ஆட்டோமோட்டிவ் மஹிந்திரா பிரிவில் விற்பனை, சர்வீஸ் & உதிரிபாகங்கள் என்ற 3S வசதிகள் அடங்கிய 9 மையங்கள், 12 ஷோரூம்கள், பராமரிப்பு/பழுதுநீக்கல் சேவைக்கான 7 பணிமனைகள் கடந்த ஐந்து ஆண்டுகள் காலஅளவில் தமிழ்நாட்டில் 30,000-க்கும் அதிகமான மஹிந்திரா வாகனங்களை இக்குழுமம் விற்பனை செய்திருக்கிறது.
English Summary
Mahindras largest dealer AEMPL Group opening a new branch in Madurai