Healthy- யான பாசிப்பருப்பு கேக்...! Kids -கு healthy snack recipe list- ல இதை add பண்ணிக்கோங்க...
Healthy lentil cake Add this to your healthy snack recipe list for kids
பாசிப்பருப்பு கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பாசிப்பருப்பு - கால் கிலோ
தேங்காய் பால் - ஒரு கப்
பால் பவுடர் - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரிப் பருப்பு - 8
நெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை - 150 கிராம்

செய்முறை :
முதலில்,வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.அதன் பின்பு வறுத்த பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக அரைக்கவும்.பின்பு வட்டமான தட்டில் லேசாக நெய்யை தடவவும்.பிறகு 5 டேபிள் ஸ்பூன் நெய்யை வாணலியில் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு, பால் பவுடர், தேங்காய் துருவல், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். அவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு துண்டுகள் போடவும். சுவையான பாசிப்பருப்பு கேக் தயார்!
English Summary
Healthy lentil cake Add this to your healthy snack recipe list for kids